05-28-2020, 02:23 PM
இதழ் மீது பனித்துளிகள்
இதமான மண் வாசம்
தழுவிடும் இளம் தென்றல்
தளர்வான மெய் சுவாசம்
நேற்றைய வலிகள் நீங்கி
நேர்கொண்ட பார்வையோடு
அமைதியான மனதை தீட்டி
அகமுதும் மகிழ்ச்சியோடு
இளங்கதிர்களை முன்னே அனுப்பி
வெளிவரும் ரம்மிய ஞாயிறு
ஒவ்வொரு நாளும் புதுமை ஆனால்
ஒரே நிகழ்வு
வெற்றியோ தோல்வியோ ஆனால்
முயற்சி மட்டும் முழுமை
இதுவே நமது நோக்கம்
இதை அறிந்தால் வாழ்வோ செழுமை